மமதா பானர்ஜி VS மருமகன் அபிஷேக் பானர்ஜி.. கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை விவகாரத்தில் மோதல்..

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான நடவடிக்கைகளில் மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கும், அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Capture
Capture
Published on: 

மேற்குவங்க பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான நடவடிக்கைகளில் மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கும், அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி டீன் சந்தீப் கோஷ் மற்றும் அவரது மருத்துக் குழுவினர் உடனடியாக பணிநீக்கம் செய்யாதது திருணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மம்தா பானர்ஜி தனது பெயரை காத்துக் கொள்ள மருத்துவக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக அபிஷேக் பானர்ஜி நினைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மமதா பானர்ஜி தலைமையில் நடந்த பேரணியை மருமகன் அபிஷேக் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv