22
news
மாணவர்கள் ஆசையை நிறைவேற்றிய எம்.பி., கனிமொழி.. சுற்றுலா அழைத்துச் செல்லுமாறு மாணவர்கள் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்ட மாதிரி பள்ளி மாணவ மாணவிகளை எம்.பி., கனிமொழி ஆதிச்சநல்லூருக்கு சுற்றுலா அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட மாதிரி பள்ளி மாணவ மாணவிகளை எம்.பி., கனிமொழி ஆதிச்சநல்லூருக்கு சுற்றுலா அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழவல்லநாட்டில் உள்ள மாவட்ட மாதிரி பள்ளியில் மாணவ, மாணவிகளை எம்.பி., கனிமொழி, சந்தித்து கலந்துரையாடினார். அப்போது தங்களை தொல்லியல் சார்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு எம்.பி.,யிடம் மாணவ, மாணவிகள் தெரிவித்தாக கூறப்படுகிறது.

