5
news
’முருகன் மாநாடு தமிழ் மாநாடாகத்தான் நடத்தப்பட்டது’.. ’விசிக MP ரவிக்குமாரின் விமர்சனத்துக்கு பதில் அளிக்க தயார்’
தமிழ் கடவுள் முருகனுக்காக எடுக்கப்பட்ட மாநாடு தமிழ் மாநாடாகத்தான் நடத்தப்பட்டது என்றும், அதில் எந்த பிரச்னையும் இல்லை என்று திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்பி தெரிவித்தார்.
தமிழ் கடவுள் முருகனுக்காக எடுக்கப்பட்ட மாநாடு தமிழ் மாநாடாகத்தான் நடத்தப்பட்டது என்றும், அதில் எந்த பிரச்னையும் இல்லை என்று திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்பி தெரிவித்தார். தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனாரின் 141-வது பிறந்தநாளையொட்டி, சென்னையை அடுத்த போரூர் அருகே துண்டலம் கிராமத்தில் அவரது இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவரிடம், முருகன் மாநாட்டு தீர்மானங்கள் குறித்து விசிக எம்பி ரவிக்குமார் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, கூட்டணி கட்சியில் இருப்பவர்களின் கேள்விக்கு பதிலளிக்க திமுக தயாராக இருப்பதாக கூறினார்.

