9
9

Lausanne டைமண்ட் லீக் ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா.. 89.49 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார்..

பாரிஸ் ஒலிம்பிக்கை தொடர்ந்து லாசன் ((Lausanne)) டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியிலும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Published on: 

பாரிஸ் ஒலிம்பிக்கை தொடர்ந்து லாசன் ((Lausanne)) டைமண்ட் லீக் ஈட்டி எறிதல் போட்டியிலும், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நான்காவது சுற்றுவரை நான்காம் இடம் வகித்து வந்த நீரஜ் சோப்ரா, ஐந்தாவது சுற்றில் 85.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார். ஆறாவது மற்றும் இறுதி வாய்ப்பில் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி 89.49 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.08 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து மூன்றாமிடம் பிடித்தார்.

newstamil.tv