

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழும் பூண்டி ஏரி வறண்டு காணப்படுவதால், சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், பூண்டி ஏரியின் மதகுகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ஜுலை மாதம் ஆந்திரா மாநிலம் கிருஷணா நதியிலிருந்து வர வேண்டிய தண்ணீரும் நிறுத்தி வைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, கிருஷ்ணா நீரை திறந்து விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.