4
news
துணைவேந்தர்கள் நியமிக்கப்படாதது தொடர்பான கேள்வி.. செய்தியாளர்களிடம் கோபப்பட்ட அமைச்சர் பொன்முடி
காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கோபப்பட்ட அமைச்சர் பொன்முடி, இதுகுறித்து எங்கு சென்று கேட்க வேண்டுமோ அங்கு சென்று கேளுங்கள் என தெரிவித்தார்.
காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கோபப்பட்ட அமைச்சர் பொன்முடி, இதுகுறித்து எங்கு சென்று கேட்க வேண்டுமோ அங்கு சென்று கேளுங்கள் என தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடைப்பெற்ற முதல் விண்வெளி தின விழாவில், பொன்முடி கலந்து கொண்டார். அப்போது, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, துணைவேந்தர் நியமிக்கக்படாதது தொடர்பான கேள்விக்கு,கோபத்துடன் பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, இது குறித்த கேள்விகளை எங்கு சென்று கேட்க வேண்டுமோ? அங்கு சென்று கேளுங்கள் என்றார்.

