Ravi
Ravi

இயக்குநராக புதிய அவதாரம் எடுக்கும் ரவி மோகன்... ஆர்த்தி பிரச்சனைக்கு இடையில் புதிய தொடக்கம்

ஆர்த்தியுடனான விவாகரத்து பிரச்சனைக்கு இடையில் நடிகர் ரவி மோகன் இயக்குநராக புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 

ஆர்த்தியுடனான விவாகரத்து பிரச்சனைக்கு இடையில் நடிகர் ரவி மோகன் இயக்குநராக புதிய அவதாரம் எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை வெளியிட்டு விவாதப் பொருளாகி வந்த நிலையில், நீதிமன்றம் கண்டித்ததை அடுத்து இருவரும் தற்போது அமைதியாக உள்ளனர்.

இந்நிலையில், ரவிமோகன் முன்னதாக பேட்டியில் தெரிவித்தபடி இயக்குநராக அறிமுகம் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் யோகி பாபுவை வைத்து படத்தை இயக்க இருப்பதாகவும், படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

newstamil.tv