karur
karur

அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.. 60 கனஅடி நீரை அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ திறப்பு

கரூர் மாவட்டம் கார்வழி அருகே உள்ள ஆத்துப்பாளையம் அணையில் இருந்து 60 கன அடி நீரை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ,பாசனத்திற்காக திறந்து வைத்தார்.
Published on: 

கரூர் மாவட்டம் கார்வழி அருகே உள்ள ஆத்துப்பாளையம் அணையில் இருந்து 60 கன அடி நீரை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ,பாசனத்திற்காக திறந்து வைத்தார்.

நொய்யல் பிரதான வாய்க்கால் மூலம் டிசம்பர் 7 ஆம் தேதி வரை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

90 நாட்கள் முறைவைத்து தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் புகளூர், மண்மங்கலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 19 ஆயிரத்து 480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

newstamil.tv