

திமுக அரசு அலட்சியம் காட்டாமல் இராணிப்பேட்டை குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்றும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
35 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த பேரழிவால் 700 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இராணிப்பேட்டை அமைச்சரின் தொகுதியாக இருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்தார்.
மேலும் பெயரளவிலான திட்டங்களை மட்டும் செயல்படுத்தாமல் குரோமியக் கழிவுகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.