A.R.MURUGADOS-ஐ தாக்கி பேசிய SALMAN KHAN
சமீபத்தில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் மதராஸி. சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த் இணைந்து நடித்திருந்த இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.இப்படத்திற்கு முன் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம் தான் சிக்கந்தர். சல்மான் கான் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் படு தோல்வியை சந்தித்தது. இதுகுறித்து கேள்வி எழுந்தபோது, சல்மான் கான் படப்பிடிப்புக்கு வருவது லேட் என்ற குற்றச்சாட்டை முருகதாஸ் கூறியிருந்தார்.
இது bollywood வட்டாரங்களில் பெரிய சலசலப்பை உருவாக்கியது. இந்நிலையில், பிக் பாஸ் 19ஆவது சீசனை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கான், இதுகுறித்து பிக் பாஸ் மேடையில் பேசியுள்ளார்.
அதில் "சிக்கந்தர் படப்பிடிப்பிற்கு நான் லேட் ஆக வந்ததால் தான் அப்படம் தோல்வியடைந்து விட்டது. மதராஸி பட ஹீரோ காலை 6 மணிக்கு வந்து விடுவார், அந்த படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி விட்டது" என, மதராஸி படம் பிளாப் என்கிற விதத்தில் கிண்டல் செய்யும் வகையில், முருகதாஸை தாக்கி பேசியிருக்கிறார், சல்மான் கான். இது தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு பெரிய நடிகர் இப்படி பேசலாமா? என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
