3
3

மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் சுந்தரா டிராவல்ஸ்... மே மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்

நடிகர்கள் முரளி மற்றும் வடிவேலு கூட்டணியில் 2002-ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம், வரும் மே மாதம் ரீ-ரிலீஸாக உள்ளது.
Published on: 

நடிகர்கள் முரளி மற்றும் வடிவேலு கூட்டணியில் 2002-ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம், வரும் மே மாதம் ரீ-ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் தஹா இயக்கிய இந்த படத்தில் ராதா, பி.வாசு, வினுசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் உள்ள நகைச்சுவை காட்சிகள், தற்போது வரை அனைவரையும் கவரும் விதமாக உள்ளன.

இந்நிலையில் இப்படத்தினை மெருக்கேற்றி மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது மறுவெளியீட்டில் பல படங்கள் வெற்றியடைந்து வருவதால், இப்படமும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

newstamil.tv