

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில் தமிழ்நாடு இந்திய காமன்வெல்த் வர்த்தக மாநாடு நடைபெற்றது. இந்தியா - சீஷெல்ஸ் ((Seychelles)) ஆகிய இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது. இதில் ஆழமான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்திய சீஷெல்ஸ் அறிக்கை 2024 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லலாட்டியானா பங்கேற்றார்