4
4

உலகின் முன்னணி நிறுவனங்களில் கோலோச்சும் தமிழர்கள்.. திமுகவின் சமூகநீதிக் கொள்கையே காரணம் - முதலமைச்சர்

தமிழக இளைஞர்கள் உலகின் பல்வேறு நிறுவனங்களில் மிக உயரிய பதவிகளில் இருப்பதற்கு காரணம் நமது சமூகநீதி கொள்கைதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Published on: 

தமிழக இளைஞர்கள் உலகின் பல்வேறு நிறுவனங்களில் மிக உயரிய பதவிகளில் இருப்பதற்கு காரணம் நமது சமூகநீதி கொள்கைதான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திராவிட மாதத்தை முன்னிட்டு, திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் யூடியூப் பக்கத்தில் உரையாற்றிய அவர், திராவிட இயக்கம் கொண்டு வந்த ஒவ்வொரு திட்டமும் ஒரு படிக்கட்டு எனவும், இனப் பகைவர்களும், அதற்கு துணைபோகும் வீணர்களும் உண்டாக்கும் திசை திருப்பல்களுக்கு நேரம் கொடுக்கக் கூடாது எனவும் கூறினார்.

மேலும், பொய்யை பரப்புபவர்களிடம் இல்லாத 2 விஷயம் நம்மிடம் உள்ளது எனவும், அதுதான் தந்தை பெரியார் சொன்ன மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகு எனவும் கூறினார்.

newstamil.tv