2-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. பள்ளியின் வளர்ச்சிக்காக நரபலி !

பள்ளிக்கு பெரியளவில் பெயரும் புகழும் கிடைக்க குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என யாரோ ஒருவர் சொன்னதை நம்பி 2 ஆம் வகுப்பு மாணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
77
77
Published on: 

பள்ளிக்கு பெரியளவில் பெயரும் புகழும் கிடைக்க குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என யாரோ ஒருவர் சொன்னதை நம்பி 2 ஆம் வகுப்பு மாணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர சம்பவம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

எப்போதும் உழைப்பே நமக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தரும். ஆனால், அதை விட்டுவிட்டு சிலர் மூட நம்பிக்கை பின்னால் போகிறார்கள். அதைச் செய்தால் நல்லது நடக்கும், இது செய்தால் நல்லது நடக்கும் என்று நம்பி பல விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இந்த சம்பவங்களால் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதைப்போல தான் இங்கேயும் கொடூரம் சம்பவம் நடந்து இருக்குது

உத்தரபிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில், ‘டி.எல். பப்ளிக் பள்ளி’ இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் ஜசோதன் சிங். அவரது மகன் தினேஷ் பாகல் என்பவர் இந்த பள்ளியில் இயக்குநராக உள்ளார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 2ஆம் வகுப்பு மாணவரான க்ரிடார்த் என்பவரின் தந்தைக்கு, பள்ளி நிர்வாகம் தொடர்புகொண்டு, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், பள்ளியின் இயக்குநர் காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பதற்றத்தோட ஓடி வந்த தந்தைக்கு, க்ரிடார்த் உயிரிழந்து விட்டாக கூறியதாக தெரிகிறது. இதனை கேட்டு சந்தேகமடைந்த தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. ஜசோதன் சிங்க்கு சூனியம் மற்றும் நரபலிகளில் நம்பிக்கை உள்ளதாக கூறப்படுகிறது. பள்ளி நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காக அந்த சிறுவனை நரபலி கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவனை கொல்வதற்காக அவரை விடுதியிலிருந்து பள்ளி இயக்குநர் வெளியே அழைத்து வந்தபோது, அந்த சிறுவன் விழித்துக்கொண்டு கத்தியுள்ளார். இதனால் பயந்து போன பள்ளி நிர்வாகம் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்கள். இந்த தகவல்கள் கிடைத்ததையடுத்து, ஜசோதன் சிங், தினேஷ் பாகல் மற்றும் 3 ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி வேறு ஒரு சிறுவனை நரபலி கொடுக்க இவர்கள் திட்டமிட்டதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்துவிட்டதாகவும் குற்றவாளிகள் விசாரணையில் போலீசாரிடம் தெரிவித்தனர். பள்ளிக்கு பெயரளவில் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் 2 வகுப்பு படிக்கும் மாணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூரம் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

newstamil.tv