52
52

சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு.. காவல்துறை டிஜிபி பவானீஸ்வரி தலைமையில் SIT அமைப்பு துரித விசாரணை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவு..

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக டிஜிபி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Published on: 

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளி பயிற்சி முகாமில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் தொடர்பாக டிஜிபி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதோடு இவ்விவகாரம் தொடர்பாக துரித விசாரணை மேற்கொண்டு 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்கவேண்டும் என்றும் 60 நாட்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இது போன்ற சம்பவங்கள் இனியும் நிகழாமலிருக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை வழங்கிட சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் பல்நோக்கு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

newstamil.tv