32
32

மின்வாரிய அலுவலர் மின்சாரம் தாக்கி பலி.. மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட போது விபரீதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Published on: 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர், டி.கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், டி.இராமநாதபுரம் என்ற இடத்தில் மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, மின்சாரம் தாக்கி பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

newstamil.tv