14
news
சாலையில் தொழுகை செய்வதாக தொடரப்பட்ட வழக்கு.. ஜமாத் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவை துடியலூரில் உள்ள மசூதியின் முன் சாலையில் தொழுகை நடத்தப்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு சம்பந்தப்பட்ட ஜமாத் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதோடு விசாரணை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஹிதயத்துல் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் மசூதியில் போதிய இடவசதியில்லாமல் சாலையில் தொழுகை நடத்தப்படுவதாகவும், தொழுகைக்கு வருவோர் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்துக்கு வந்த நிலையில், வருவாய் துறை அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி நிலைமையை கண்காணித்து வருவதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.