EPS Magalir thittam
news
பெண்களுக்கான திட்டங்கள் பெயரளவில் மட்டுமே உள்ளன” அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு..!
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பெண்களை மையப்படுத்தி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெறும் பெயரளவில் இருப்பதாகவும் நடைமுறை படுத்துவதில் பல்வேறு தடைகள் இருப்பதாகவும் எதிர்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 2 கோடியே 6 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 1 கோடியே 6 லட்சம் பேர் மட்டுமே தேர்வானதாகவும் அவ்வாறு தேர்வானவர்களுக்கும் உரிமை தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டு பெண்களுக்கு கோஷங்களும். இலவசங்களும் தேவையில்லை என்றும், அவர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.