IndustryNews
IndustryNews

எஃகு, அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்கிய அமெரிக்கா... 25 சதவிகிதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்ட இறக்குமதி வரி

அமெரிக்கா, எஃகு, அலுமினியம் உள்ளிட்டவற்றின் மீதான இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக உயர்த்தி இரட்டிப்பாக்கி உள்ளது.
Published on: 

அமெரிக்கா, எஃகு, அலுமினியம் உள்ளிட்டவற்றின் மீதான இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக உயர்த்தி இரட்டிப்பாக்கி உள்ளது.

பென்சில்வேனியாவில் பேசிய டிரம்ப், எஃகு இறக்குமதி மீதான வரிகள் 25 சதவிகிதத்திலிருந்து 50 சதவீதமாக இரட்டிப்பாக்கப்படும் என்றும், அலுமினியத்திற்கும் இதே போன்ற உயர்வு விதிக்கப்படும் என தெரிவித்தார்.

இதன் மூலம் எஃகு தொழில் மற்றும் தேசிய விநியோகத்தை அதிகரிக்க முடியும் என்ற டிரம்ப் அதே நேரத்தில் சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்கவும் வழி வகுக்கும் என்றார்.

இந்த நடவடிக்கை வரும் புதன்கிழமை முதல் அமலுக்கு வர உள்ளது.

newstamil.tv