13
13

கடும் பனிப்பொழிவால் மூடப்பட்ட ரயில் தண்டவாளம்.. சிறப்பு ரயில் இன்ஜின் மூலம் அகற்றப்பட்ட பனிப்பொழிவு

ஜப்பானில் குளிர்காலம் தொடங்கி கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், எங்கு பார்த்தாலும் வெண் போர்வை போர்த்திய பூமியாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில், ஹிரகாவாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக, ரயில் தண்டவாளம் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயில் இன்ஜின் மூலம் பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன. வடக்கு ஜப்பானின் பெரிய பகுதிகளில் 50 சென்டி மீட்டர் முதல் 100 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு இருந்ததாக தெரிவித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம், பனிச்சரிவு மற்றும் பனிப்புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on: 

ஜப்பானில் குளிர்காலம் தொடங்கி கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், எங்கு பார்த்தாலும் வெண் போர்வை போர்த்திய பூமியாக காட்சியளிக்கிறது.

இந்த நிலையில், ஹிரகாவாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக, ரயில் தண்டவாளம் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயில் இன்ஜின் மூலம் பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன.

வடக்கு ஜப்பானின் பெரிய பகுதிகளில் 50 சென்டி மீட்டர் முதல் 100 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு இருந்ததாக தெரிவித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம், பனிச்சரிவு மற்றும் பனிப்புயல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


newstamil.tv