vijay
vijay

தமிழ்நாட்டை மீட்போம் - தவெக தலைவர் விஜய்

மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
Published on: 

மக்கள் விரோத திமுகவிடம் இருந்து, மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம் என தவெக தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும் எனக் கூறி, தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விஜய்.

இதுதொடர்பாக, தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பதிவு:
தமிழ்நாடு உருவாக காரணமான, எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவு கூர்வோம். அவர்களை எந்நாளும் போற்றுவோம்.

மக்கள் விரோத திமுகவிடமிருந்து மக்கள் சக்தியின் துணையோடு தமிழ்நாட்டை மீட்போம். 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்.
தமிழின் பெருமையும் தமிழ்நாட்டின் புகழும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும்.
இனிய தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு விஜய் பதிவிட்டுள்ளார்.

newstamil.tv