அதி கனமழை பெய்யும் என வானிலை எச்சரிக்கை

நீலகிரியில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை அலெர்ட்
Published on: 

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இதுதொடர்பாக, சென்னை மண்டல வானிலை மையம் கூறி இருப்பதாவது;

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று அக்டோபர் 24ஆம் தேதி, காலை 0:30 மணி அளவில் அதே பகுதியில் ‘ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி’ ஆக நிலவுகிறது. இது, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.

ரெட் அலர்ட்
ரெட் அலர்ட்நியூஸ்தமிழ்24x7

26ஆம் தேதி...

இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மேலும் வலுப்பெற்று 26ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாகவும் மாறக்கூடும். இது, மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிக்கு அருகில் 28ஆம் தேதி தேதி காலை நகரக்கூடும்.

அக்டோபர் 24

நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் கூடிய அதி கன மழை பெய்யக்கூடும்.

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கோவை மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

ஆரஞ்சு அலர்ட்
வானிலை எச்சரிக்கைநியூஸ்தமிழ்24x7

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

அக்டோபர் 25

தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய அதி கன மழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

வானிலை எச்சரிக்கை
ஆரஞ்சு அலர்ட்நியூஸ்தமிழ்24x7

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் புதுவையிலும் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 26

சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 27

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதி கனமழை
ரெட் அலர்ட்நியூஸ்தமிழ்24x7

சென்னையில்...

நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான, கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இவ்வாறு சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அலெர்ட்
அடுத்த 48 மணி நேரத்தில் ‘அர்னாப்’ புயலாக மாறும் என வானிலை மையம் கணிப்பு
newstamil.tv