காற்றாலை மின் உற்பத்தி 92 கோடி யூனிட் சரிவு.. நடப்பு சீசனில் 626 கோடி யூனிட் மட்டுமே மின் உற்பத்தி

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 92 கோடி யூனிட் குறைந்துள்ளதாக மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் தெரிவித்துள்ளது
காற்றாலை மின் உற்பத்தி 92 கோடி யூனிட் சரிவு.. நடப்பு சீசனில் 626 கோடி யூனிட் மட்டுமே  மின் உற்பத்தி
Published on: 

தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 92 கோடி யூனிட் குறைந்துள்ளதாக மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் தெரிவித்துள்ளது.நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் உள்ளன. வழக்கமான காற்றாலை சீசன் காலமான மே முதல் செப்டம்பர் மாதம் வரை தினமும் சராசரியாக 8 முதல் 10 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். நடப்பு சீசனில் காற்றின் வேகம் குறைந்ததால், மே முதல் ஆகஸ்ட் 16 ம் தேதி வரை 626 கோடி யூனிட் மட்டுமே மின்சாரம் உற்பத்தியாகி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உற்பத்தி 718 கோடி யூனிட்களாக இருந்தது.

newstamil.tv