தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

இறங்குமுகத்தில் இருந்த தங்கத்தின் விலையில் சற்று உயர்வு ஏற்பட்டுள்ளது.
தங்கம்
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை சற்று உயர்ந்தாலும் வெள்ளி விலை குறைந்தது. ஒரு கிலோ 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

தங்கம்
தங்கம்நியூஸ்தமிழ்24x7

அக்டோபர் 22

ஒரு சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 155 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,235 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 225 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 25,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 23

ஒரு சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை இறங்குமுகத்தில் இருந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 225 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

அக்டோபர் 20 - ரூ.1,07,920

அக்டோபர் 21 - ரூ.1,07,120

அக்டோபர் 22 - ரூ.1,05,880

அக்டோபர் 23 - ரூ.1,04,480

அக்டோபர் 24 - ரூ.1,04,560 இன்று தங்கம்

தங்கம்
இன்றைய ராசிபலன் 24102026
newstamil.tv