தமிழகம் மீது மத்திய அரசு தொடர் தாக்குதல் - செல்வப்பெருந்தகை.. காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குற்றச்சாட்டு

தமிழகம் மீது மத்திய அரசு தொடர் தாக்குதல் நடத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என்று கூறுவது சர்வாதிகாரம் என்றார்.
11
11
Published on: 

யுபிஎஸ்சி தேர்வில் பெரியார் குறித்து சாதிய அடையாளத்துடன் கேள்விகள் கேட்கப்பட்டது தமிழகத்தில் கலவர பூமியாக்கும் பா.ஜ.க. திட்டத்தின் வெளிப்பாடே என்றவர் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்பட வேண்டும் என சிலர் பகல் கனவு கண்டு கொண்டுள்ளனர் அந்த கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.

முன்னதாக புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

newstamil.tv