

உதயநிதி துணை முதல்வரானது பற்றிய கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பது உறுதி என தெரிவித்தார்.
தொடர்ந்து ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு டென்சன் ஆன இபிஎஸ், அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட ஓபிஎஸ் குறித்து கேள்வி கேட்காதீர்கள் என கூறினார்.