

திமுக ஆட்சி முடியும் தருவாயில் தாயுமானவர் திட்டத்தை விளம்பரத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தொடங்கியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2024 -25 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட தாயுமானவர் திட்டம் வேறா ? என்றும் தற்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ரேஷன் பொருட்களை நேரடியாக வழங்கும் திட்டம் வேறா?என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நகரும் ரேஷன் கடைகளின் நிலை என்னவென்று தெரியவில்லை என கூறியுள்ளார்.
அதிமுக திட்டத்தை தூசு தட்டி , புதிய பெயர் வைத்து திமுக அரசு விளம்பரப்படுத்தி வருவதாக சாடினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள், காப்பி பேஸ்ட் , பெயிலியர் மாடல் திமுக அரசை வீடடுக்கு அனுப்புவது உறுதி என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.