டெல்லி எஜமானர்களை காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறு.. எடப்பாடி பழனிச்சாமி மீது ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டு

பொழுது விடிந்தால் திமுக அரசின் மீது எந்த அவதூறைப் பரப்பலாம் என பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழு நேரப் பணியாக எடப்பாடி பழனிச்சாமி செய்து கொண்டிருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்தார்.
3
3
Published on: 

தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் அராஜகம் செய்யும் தனது டெல்லி எஜமானர்களை காப்பாற்ற திமுக அரசின் மீது அவதூறை பழனிசாமி அள்ளி வீசியிருக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் என்ற பொறுப்பிற்கு கொஞ்சமும் தகுதியற்ற முறையில், பாஜகவின் வாட்சப் யூனிவர்சிட்டி தகவல்களை அறிக்கையாக தொடை நடுங்கி பழனிசாமி வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று ஆர்.எஸ் பாரதி விமர்சித்தார்.

newstamil.tv