2
அரசியல்
இடஒதுக்கீட்டால் சமூகங்களுக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் என்ன ? தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டால் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஏற்பட்ட பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டால் ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஏற்பட்ட பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஏற்பட்ட சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவிருக்கும் நீதியரசர் குரியன் ஜோசப் குழு, அதற்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகள் எந்த அளவுக்கு துணை நின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதத்திற்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாக பொய்யான தகவல்களை வெளியிட்ட திமுக அரசு, பிற சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

