ஜெயங்கொண்டம் அருகே மாகாளியம்மன் நடன உற்சவ விழா

மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வீதி உலா வந்த மாகாளியம்மனை திரளான மக்கள் தரிசித்தனர்.
ALR kali
ALR kali
Published on: 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழுவூரில் உள்ள மகா காளியம்மன் கோயிலில் அம்மன் திருநடன உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

பல்வேறு பிரச்சனைகளால் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த மகாகாளியம்மன் திருநடன உற்சவ விழா, கடந்த 3ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வாணவேடிக்கை, மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வீதி உலா வந்த மாகாளியம்மனை திரளான மக்கள் தரிசித்தனர்.

newstamil.tv