Australia A Team
Australia A Team

இந்தியா 'ஏ 'அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முதல் நாளில் 350/9 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா 'ஏ' அணி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தனர்.
Published on: 

இந்தியா 'ஏ 'அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி 350 ரன்கள் குவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தனர்.

அந்த அணியில் ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மனவ் சுதர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

newstamil.tv