டு பிளசிஸ் வேதனை
டு பிளசிஸ் வேதனை

நேபாள பேரிடரை கண்டு மனம் உடைந்தேன்

இந்த துயரமான சூழலில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
Published on: 

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டு பிளசிஸ் வேதனை

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவை கண்டு மனம் உடைந்ததாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஃபாஃப் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார். நேபாள மக்களின் அன்பையும் அழகையும் நேரில் அனுபவித்ததாக கூறிய அவர், இந்த துயரமான சூழலில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

நமீபியாவில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர்

நமீபியாவில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரில், தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது.

145 என்ற வெற்றி இலக்கை தென் ஆப்பிரிக்கா 13.4 ஓவர்களில் எட்டியது. டெவால்ட் பிரேவிஸ் 32 பந்துகளில் 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

அமெரிக்க ஓபன் நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர், நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கராஸ் மீண்டும் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச், 25-வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறார்.

newstamil.tv