

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என கேப்டன் ரோஹித் நம்பிக்கை தெரிவித்தார். வரும் 28 ந் தேதி முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மிக முக்கியமானது என்றும் தனக்கு எந்தவித நெருக்கடியும் இருப்பதாக உணரவில்லை எனவும் ரோஹித் கூறினார்.