Kuldeep
Kuldeep

ரிங்கு சிங்கை குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்த விவகாரம் இருவருக்கும் இடையில் சண்டையில்லை, நட்பு மட்டுமே கொல்கத்தா, டெல்லி அணிகள் வீடியோ வெளியிட்டு விளக்கம்...!

ரிங்கு சிங்கை குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா, டெல்லி அணிகள் விளக்கம் அளித்துள்ளன.
Published on: 

ரிங்கு சிங்கை குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா, டெல்லி அணிகள் விளக்கம் அளித்துள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்கு பிறகு இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ரிங்கு சிங் கன்னத்தில் குல்தீப் யாதவ் இருமுறை அறைந்ததால், அவர் சோகமடைந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையில் எந்த சண்டையும் இல்லை என்று விளக்கமளித்துள்ள கொல்கத்தா அணி நிர்வாகம்.

செய்திக்கும் உண்மைக்கு இடையில் உள்ள வித்தியாசம் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதே வீடியோவை நட்பு மட்டுமே என்ற தலைப்பில் டெல்லி அணியும் பதிவிட்டுள்ளது.

newstamil.tv