48
விளையாட்டு
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தோல்வி.. தாய்லாந்து வீராங்கனையிடம் வீழ்ந்த ஸ்ரீஜா அகுலா
உலக டேபிள் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா தோல்வியடைந்தார். கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில், இந்திய முன்னணி வீராங்கனை ஸ்ரீஜா அகுலா, தாய்லாந்தின் சுதாசினியுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை சுதாசினி 9க்கு 11, 11க்கு 8, 11க்கு 6, 11 க்கு 5, 11க்கு 2 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.