

அஸ்லான் ஷா கோப்பை ஆக்கி இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான சர்வதேச ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள இபோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட 6 அணிகள் கலந்து கொண்டு ரவுண்ட் ராபின் லீக் முறையில் விளையாடுகின்றன. இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்த நிலையில், தமது கடைசி லீக் ஆட்டத்தில் கனடாவுடன் மோதியது. அதில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 14- க்கு 3 என்ற கோல் கணக்கில் கனடாவை ஊதித்தள்ளி, 4-வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம், இந்த தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.