32
32

காசாவில் மீண்டும் செயல்பட தொடங்கிய பேக்கரிகள்.. நிவாரண பொருட்கள் வந்துள்ளதால் உற்பத்தி தொடக்கம்

காசாவிற்குள் நிவாரணப் பொருட்களுடன் மீண்டும் டிரக்குகள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பேக்கரிகள் செயல்பட தொடங்கின.
Published on: 

காசாவிற்குள் நிவாரணப் பொருட்களுடன் மீண்டும் டிரக்குகள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பேக்கரிகள் செயல்பட தொடங்கின.

உணவு பற்றாக்குறையால் தவித்த காசா மக்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் எழுந்த அழுத்தத்தின் காரணமாக காசாவிற்கு நிவாரண பொருட்கள் மற்றும் உணவுகளை ஏற்றி செல்லும் லாரிகளை இஸ்ரேல் அனுமதித்தது.

இந்நிலையில் டெய்ர் அல்-பலாவில் மாவு பற்றாக்குறையால் மூடப்பட்டிருந்த பேக்கரிகள் தற்போது செயல்பட தொடங்கியுள்ளன.

இதனிடையே மாவு கிடைத்த உடன் ரொட்டிகள் செய்து அதனை மக்களுக்கு விநியோகிக்கும் பணியை தொடங்கிவிட்டதாக பேக்கரி ஊழியர்கள் தெரிவித்தனர்.

newstamil.tv