SA
உலகம்
மதுபான விடுதியில் மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச் சூடு
அடையாளம் தெரியாத 3 நபர்கள், எதிர்பாராத விதமாக அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க நாட்டில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர். பிரிட்டோரியா நகருக்கு அருகில் உள்ள தனியார் மதுபான விடுதியில் மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள், எதிர்பாராத விதமாக அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் மொத்தம் 14 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
