H-1B விசா விதிகளை தளர்த்துவதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு

டிரம்பின் இந்த மனமாற்றம் அவர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.
Trumph visa
Trumph visa
Published on: 

அமெரிக்காவில் தகுதி வாய்ந்த திறமையான பணியாளர்கள் இல்லை என்பதால் தாம் முன்னர் அறிவித்த H-1B விசா சீர்திருத்தங்களை இலகுவாக்குவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். Fox News டிவிக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த அவர், H-1B விசாக்களுக்கு தாம் அறிவித்த ஒரு லட்சம் டாலர் கட்டணம் குறைக்கப்படும் என சூசகமாக தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து திறமையான ஊழியர்களை அமெரிக்காவுக்கு கொண்டு வர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார். அமெரிக்காவில் பணியாற்ற வழங்கப்படும் H-1B விசாக்களில் 70 சதவிகிதம் இந்தியர்களுக்கு கிடைப்பதால், டிரம்பின் இந்த மனமாற்றம் அவர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.

டிரம்பின் முந்தைய அறிவிப்பு அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் இந்திய பணியாளர்களுக்கு பேரிடியாக அமைந்த து குறிப்பிடத்தக்கது.

newstamil.tv