இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு செல்ல உள்ள அதிபர் டிரம்ப்

முதற்கட்டமாக வரும் திங்கள் கிழமை பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறிய அதிபர் டிரம்ப்
TRUMP EGYPT
TRUMP EGYPT
Published on: 

காசா அமைதித் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்கும் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்தில் நடந்து வருகிறது. முதற்கட்டமாக வரும் திங்கள் கிழமை பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்கள் உடல்கள் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறிய அதிபர் டிரம்ப் விரைவில் இஸ்ரேல் மற்றும் எகிப்து செல்ல உள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

newstamil.tv