வெள்ளத்தில் மீட்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு
பட்டியலில் பெயர் உள்ளதா என தேடும் குடும்பத்தினர்
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான பெருவெள்ளத்திற்குப் பிறகு மீட்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை நேபாள தேசிய பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளன.
தங்களது அன்பானவர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் உள்ளதா என்பதை அறியக் குடும்பத்தினரும் உறவினர்களும் கண்ணீருடன் தேடினர்.
ராணுவ முகாமுக்கு படையெடுக்கும் உறவினர்கள்
நேபாள வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின் காத்மண்டு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முகாமில் தங்கவைக்கப்பட்டவர்களில் தங்களது குடும்பத்தினர் இருக்கிறார்களா என உறவினர்கள் மாயமானவர்களை தேடி அலைகின்றனர்.
தாடிங் நகரில் மீட்பு பணியில் ராணுவம் தீவிரம்
நேபாளத்தில் நேரிட்ட பயங்கர பெருவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தாடிங் நகரில் ராணுவம் உள்ளிட்ட மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் புகுந்த சேறு மற்றும் சகதியை பொக்லைன் மற்றும் மின்மோட்டார் உதவியுடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

