'சுகோய் -57' என்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானம்

அனைத்து முக்கிய உதிரிபாகங்களும் இந்தியாவிலேயே தயாராகும் வகையில் 100 சதவீதம் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்யப்படும்
Sugei
Sugei
Published on: 

'சுகோய் -57' என்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை இந்தியாவிலேயே தயாரிக்க அனைத்து தொழில்நுட்பங்களையும் முழுமையாக வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா அளித்த ஒப்புதல் படி, முதலில் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுகோய்- 57 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும், அதே நேரம் இந்தியாவிலும் படிப்படியாக உற்பத்தி தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய உதிரிபாகங்களும் இந்தியாவிலேயே தயாராகும் வகையில் 100 சதவீதம் தொழில்நுட்ப பரிமாற்றம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

newstamil.tv