கண்ணாடி சுவரை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் புகுந்த கார்

குழந்தை மீது மோதுவது போல் வந்த காரை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் அக்கா, மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று தங்கையை காப்பாற்றினார்.
China
China
Published on: 

சீனாவில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார கார் சாலையோர வீட்டிற்குள் புகுந்த நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை துரிதமாக செயல்பட்டு நொடிப்பொழுதில் காப்பாற்றிய அக்காவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சீனாவின் மத்திய மகாணமான ஹெனானில் மின்சார கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர வீட்டின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதுவது போல் வந்த காரை பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் அக்கா, மின்னல் வேகத்தில் ஓடிச் சென்று தங்கையை காப்பாற்றினார்.

newstamil.tv