Trumph
உலகம்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வருமா?
டிரம்ப் முன்மொழிந்த இந்த திட்டத்தை ரஷ்யா வரவேற்றிருக்கிறது. அமைதிக்கான இறுதி வாய்ப்பு என்றும் அதிபர் புதின் உக்ரைனை எச்சரித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர 28 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் ரஷ்யாவுக்கு சாதகமாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. நேட்டோவில் இணைய விடாமல் தடுப்பது, ராணுவ பலத்தை குறைப்பது போன்ற உக்ரைனுக்கு பாதகமான அம்சங்களே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டிரம்ப் முன்மொழிந்த இந்த திட்டத்தை ரஷ்யா வரவேற்றிருக்கிறது. அமைதிக்கான இறுதி வாய்ப்பு என்றும் அதிபர் புதின் உக்ரைனை எச்சரித்துள்ளார்.
