இருசக்கர வாகனம் திருட்டு 
மாவட்ட செய்திகள்

வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு

விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது இருசக்கர வாகனம் திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

Manigandan Raja

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தேசூர்பாட்டை பகுதியில் அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனியார் செல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு மீண்டும் வீட்டின் முன் பக்கத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.

நேற்று இரவு மர்ம நபர்கள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து அப்பாஸ் இருசக்கர வாகனத்தை சைடு லாக்கை காலால் உடைத்து அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புடைய அதிவேகம் கொண்ட இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இருசக்கரத்தில் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்தவாறு இந்த வாகனத்தை திருடி செல்கின்றனர்.இது குறித்து செஞ்சி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது இருசக்கர வாகனம் திருடப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.