Himantha piswa 
இந்தியா

துபாய், அமெரிக்காவில் சொத்து? - அசாம் முதல்வர் மறுப்பு

பாகிஸ்தானின் சமூக ஊடக குழுவிடமிருந்து பெறப்பட்ட பொய்த் தகவல்,பாஸ்போர்ட் தொடர்பாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு.

Manigandan Raja

அசாம் முதல்வர் மறுப்பு : 

தனது மனைவி பாஸ்போர்ட் தொடர்பாக காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டு, பாகிஸ்தானின் சமூக ஊடக குழுவிடமிருந்து பெறப்பட்ட பொய்த் தகவல் என அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

அவரது மனைவி ரினிகி புயன் சர்மா, ஐக்கிய அரபு அமீரகம், ஆன்டிகுவா, எகிப்து ஆகிய 3 நாடுகளின் பாஸ்போர்ட்களை வைத்துள்ளதாகவும், துபாய், அமெரிக்காவில் சொத்து உள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.