மகளிர் பிரிமியர் லீக்(WPL) :
மகளிர் பிரீமியர் இறுதிப்போட்டிக்கு முந்தைய இரவு, பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு 103 டிகிரி ஃபாரன்ஹீட் காய்ச்சல் இருந்ததாக அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
கடுமையான காய்ச்சல் மற்றும் ஃப்ளூ பாதிப்பு இருந்தபோதிலும், அணியின் வெற்றிக்காக அவர் ஓய்வெடுக்காமல் விளையாடத் தீர்மானித்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.