ரசிகர்களின் பாராட்டு மழையில் வரும் தாய் கிழவி :ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வரும் தாய் கிழவி திரைப்படம் வெளியான 10 நாட்களில் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை எட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் A,B,C என அனைத்து செண்டர்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.லெஜண்ட் சரவணன் நடித்துள்ள லீடர் திரைப்படம் :லெஜண்ட் சரவணன் நடித்துள்ள லீடர் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகிறது. இந்நிலையில், வரும் 21-ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.18 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீசாகும் ”சிலம்பாட்டம்” :கடந்த 2008-ம் ஆண்டு வெளியான சிலம்பாட்டம் திரைப்படம் பிரான்ஸ் நாட்டில் வரும் 13-ம் தேதி மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..! சிம்பு இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் நல்ல வசூல் குவித்ததுடன், அவரின் திரைப் பயணத்தில் முக்கியமான படமாகவும் அமைந்தது.இந்த படம் 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீசாவது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது."விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" மலையாள ரீமேக் என வதந்தி :வெங்கட் அட்லூரி-சூர்யா கூட்டணியில் உருவாகும் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம், மலையாள படத்தின் ரீமேக் என தகவல் பரவி வந்த நிலையில், படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. பிரித்விராஜின் கங்காரு திரைப்படத்தின் ரீமேக்-தான் என கூறப்பட்ட நிலையில், வெங்கட் அட்லூரி எழுதிய கதைதான் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" என படக்குழு அறிவித்துள்ளது.ஏப்ரல் 10-ம் தேதி கருப்பு திரைப்படம் ரிலீஸ் இல்லை :சூர்யாவின் கருப்பு திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகாது என அறிவித்த படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, இன்னும் ஒரு வாரத்தில் படம் குறித்த பெரிய அப்டேட் வெளியாகும் என சஸ்பென்ஸ் வைத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு பேசிய அவர், ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு படம் தரமானதாக இருக்கும் என தெரிவித்தார். Related Link பிக் பாஸ் முதல் சினிமா வரை