Also Watch
Read this
By: Manigandan Raja

அறிவு திரைப்படத்தில் நடிக்கிறார் சுபிக்சா :
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சுபிக்சா, விஜயகுமாரின் அறிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்..! மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியான படத்தின் போஸ்டரில் சுபிக்சாவும் இடம்பெற்றுள்ள நிலையில், படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ஆர்யாவின் புகைப்படங்கள் வெளியீடு :
தமது 40-வது திரைப்படத்திற்காக தயாராகி வரும் நடிகர் ஆர்யா, இரண்டு நடிகைகளுடன் சேர்ந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நடிகை நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா உடன் தான் அவர் ஒர்கவுட் செய்திருக்கிறார்.

நிகில் முரளி இயக்கி வரும் இந்த திரைப்படத்தை ஆர்யாவின் மனைவி நடிகை சாயிஷா தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சலாம்-இ-இஷ்க் பாடலுக்கு ஐஸ்வர்யா-அபிஷேக் நடனம் :
மும்பையில் நடந்த திருமண கொண்டாட்டத்தில் ஐஸ்வர்யா-அபிஷேக் பச்சன் தம்பதி சலாம்-இ-இஷ்க் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வருடங்களாக, அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்யப் போவதாக வதந்திகள் பரவி வந்தன.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐஸ்வர்யா-அபிஷேக் தம்பதி திருமண நிகழ்வில் ஒன்றாக கலந்து கொண்டு ஒன்றாக நடனமாடியுள்ளனர்.
VFX காட்சிகளில் யாஷ்-க்கு திருப்தி இல்லை :
மார்ச் 19ஆம் தேதி வெளியாவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்ட யாஷ்-ன் ((YASH))TOXIC திரைப்படம் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

வளைகுடா நாடுகளில் நிகழும் போர் பதற்றம் மட்டுமல்லாமல், திரைப்படத்தின் VFX காட்சிகளிலும், புரொமோஷன் பணிகளிலும் யாஷ்-க்கு திருப்தி இல்லாத காரணத்தால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved