news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news படு வைரல் ஆன பார்த்திபன் வீடியோ
tv

Also Watch

tv

Read this

படு வைரல் ஆன பார்த்திபன் வீடியோ

நான் வருத்தம் தெரிவித்தது தவறு

46

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் வெளியிட்ட வீடியோ சமூக வலை தளங்களில் படு வைரலாகி வருகிறது.

வீடியோ வெளியிட்ட பார்த்திபன்
பார்த்திபன் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
தவறு என்பது தெரியாமல் தவறி நடப்பது. தப்பு என்பது தெரிந்தே செய்வது. நான் செய்ததை ஒரு தவறு என்று தான் உணர்கிறேன். அது நிதர்சனமாகத் தவறி தான் நிகழ்ந்தது. மேடையில் நான் பேசிக்கொண்டிருந்த போது, திடீரென ஒரு புகைப்படம் திரையில் வந்து விழுந்தது. அதனைப் பார்த்ததும் நான் திகைத்துப்போய் என்ன பேசுவது? என்று தெரியாமல் தவித்தேன். அந்தப் புகைப்படத்தைப் போட்டுப் பேச வேண்டும் என்று, எந்த திட்டமும் நான் தீட்டவில்லை.

எந்த தேவையும் இல்லை
நான் யாருக்கும் அடிமையல்ல, எந்த ஒரு கட்சிக்கும் பணம் வாங்கிக்கொண்டு ஆதரவாகப் பேசவில்லை. என் மரணம் வரை எதற்காகவும் நான் காசு வாங்கிக் கொண்டு எந்த தவறையும் செய்யப் போவதில்லை. அந்த நிகழ்ச்சியில் பேசும்போது, மகளிர் தின விழாவாக இருந்ததால், வேலு நாச்சியார், அன்னை தெரசா போன்றோரை பற்றி பேசவே விரும்பி இருப்பேன். மாறாக, தனிப்பட்ட நபர்களின் புகைப்படங்களை வைத்துப் பேச எனக்கு எந்த தேவையும் இல்லை.

குடும்ப விவகாரம், குந்தவை
திரையில் அந்த புகைப்படத்தை பார்த்தவுடன், பிரியங்கா 'குந்தவை, குந்தவை' என்று சொன்னதால், அது எனக்கு ஒரு வார்த்தை ஜாலமாகத் தோன்றியது. நான் மேடையில் அமர்ந்திருந்தபோது, பலரும் விஜய்யின் வளர்ச்சி மற்றும் குடும்ப சூழல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்மணி வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்திருக்கலாம் என்று பொது வெளியில் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த ஆதங்கம் என் ஆழ்மனதில் இருந்தது, அதுவே ஒரு தன்னிச்சையான வார்த்தையாக வெளிப்பட்டது. நான் யாரையும் மிரட்டவோ அல்லது ஈகோ காட்டவோ அவ்வாறு பேசவில்லை.

தரக்குறைவான பதிவு
இந்த நிகழ்ச்சி முடிந்ததும், நண்பர் எச்சரித்ததால் தான், இது தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும் என்று உணர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் உடனே அந்த வீடியோவை நீக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், காலையில் அது சமூக வலை தளங்களில் பரவிவிட்டது. நான் பேசியது ஒரு பெண்ணைப் பற்றியது என்பதால், அது பெண்களுக்கு எதிரான கருத்தாக பார்க்கப்பட்டது எனக்கு வருத்தத்தைத் தந்தது. அதனால் வீடியோ மூலம் உடனடியாக வருத்தம் தெரிவித்தேன். ஆனால், நான் வருத்தம் தெரிவித்துவிட்டு அமைதியாக இருக்கும்போது, சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து எனக்கு எதிராக ஒரு தரக்குறைவான Tweet பதிவு வந்தது. அந்த ட்வீட் என் மனதை மிகவும் பாதித்தது.

We stand with Parthiban
மற்றவர்கள் என்னை விமர்சிப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், மற்றவர்கள் அந்தப் பெண்மணியின் குடும்பத்தைப் பற்றிக் கொச்சையாகப் பல கருத்துகளைப் பேசியபோது கண்டிக்காதவர்கள், என் மீது மட்டும் ஏன் இவ்வளவு கடுமையாகக் கண்டனம் தெரிவிக்கிறார்கள்? அந்த பதிவு வந்த பிறகு தான், நான் வருத்தம் தெரிவித்தது தவறு என்று எனக்குத் தோன்றியது. உண்மைக்காக என்னுடன் நிற்பவர்களுக்கு (We stand with Parthiban) நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.

Related Link
வைரல் ஆன விஜய், திரிஷா

வைரல் ஆன விஜய், திரிஷா

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 47 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved